S.K. சுரேஷ்பாபு.
நாமக்கல்லில் நடைபெற்ற சர்வம் விருதுகள் 2025 வழங்கும் விழா. சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகளுக்கான விருது வழங்கி கௌரவிப்பு.
சர்வம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த சமுதாய சேவை செய்துபவர்களை கௌரவிக்கும் வகையில் சர்வம் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சிறந்த சமூக சேவையை தொடர்ச்சியாக செய்து வரும் சேலத்தைச் சேர்ந்த ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனமான Dr. டாக்டர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகளுக்கான சர்வம் விருதுகள் 2025 வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதுபோன்ற சேவைகளை தொடர்ந்து மேற்கொள்ள விழாவின் போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் ஸ்பிரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சர்வம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார் மற்றும் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 2025 சிறந்த சமூக சேவகருக்கான சர்வம் விருதினை Dr. நாகா அரவிந்தன் அவர்களுக்கு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் மற்றும் தேசிய அளவில் இவரது சேவையை பாராட்டி ஏராளமான விருதுகளை சேலத்தை சேர்ந்த மிகச்சிறந்த சமூக சேவகர் டாக்டர் நாகா அரவிந்தன், குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: