ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் 246 பேர் தபால் வாக்களித்து உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,529 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 1,570 வாக்காளர்களும் என 4,099 பேர் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்த ஏதுவாக 12டி படிவம் வழங்கப்பட்டது.
இதில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 209 பேர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என 256 வாக்காளர்கள் 12டி படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இவர்களிடம் தபால் வாக்கு பெறும் பணி கடந்த 23, 24, 25ம் தேதிகளில் நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து, கடைசி நாளான இன்றும் (27ம் தேதி) தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது. இதில், 85 வயதிற்கு மேற்பட்ட 6 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், ஒரு வாக்காளர் இடமாறுதலிலும், 3 வாக்காளர்கள் மரணமடைந்தும் என 10 வாக்காளர்கள் வாக்களிக்காத நிலையில், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 199 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 47 பேர் என மொத்தம் 246 வாக்காளர்கள் தபால் வாக்களித்து உள்ளனர்.
0 coment rios: