சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
76-வது இந்திய குடியரசு தின விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறையின் சுற்றறிக்கையை கிடப்பில் போட்டு உதாசீனப்படுத்திய அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் குடியரசு தினமான விழா நடைபெற்றது. வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா காலகட்டங்களில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் கொடி ஏற்றி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தி சாரணர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்வது வழக்கமான ஒன்றாக தற்பொழுது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊனத்தூர் அரசு பள்ளி சம்மந்த படாத நபர் தேசிய கொடி ஏற்றிய சம்பவம் பள்ளிக்கல்வித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை தமிழக அரசு செய்யபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில்.
அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே தேசியக் கொடியினை ஏற்ற வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்த நிலையில், சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிசெல்வன் விடுமுறையில் இருந்த போதும், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மணிகண்டன் அவர்களை தேசியக் கொடியினை ஏற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு பதிலாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவராக உள்ள சுப்பிரமணி என்பவர் தேசிய கொடியை ஏற்றியது அரசு பள்ளி கல்வி துறை விதி மீறலை காட்டுகிறது.
இந்த அவல நிலை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர், கல்வி துறை முதன்மை கல்வி அலுவலர் ( Chief Education Officer ) ஆகியோர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தலைவாசல் ஊனத்தூர் அரசு மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ரத்து செய்து புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, தவறும்பட்சத்தில் , தமிழக அரசு கல்வி துறை விசாரணைக்கு புகார் அளிக்கபடும் என்றும் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
0 coment rios: