சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
76 வது குடியரசு தின விழா. சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கூட்டத்தில் பகுதி சபா கூட்டம்.
இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழக முழுவதும் மாநகராட்சி நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் 9 வது வார்டுக்கு உட்பட்ட வாய்க்கால் பட்டறை பகுதியில் பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில், சேலம் மாநகராட்சியின் தொழில்நுட்ப உதவியாளர் ஸ்ரீதர், வருவாய் உதவியாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது பகுதிகளில் உள்ள குடிநீர், கழிவு நீர் வாய்க்கால், தெருவிளக்கு, சாலை வசதி உட்பட தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர். அதுமட்டுமில்லாமல் 9-வது கோட்டத்தில் மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற இடத்தில் இருந்து சிறப்பாக பணியாற்றி வரும் வழக்கறிஞர் தெய்வலிங்கத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும் பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களால் தெரிவிக்கப்பட்டது. வாழ்த்துக்களையும் நன்றிகளையும் ஏற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு கூடிய விரைவில் அனைத்து கோரிக்கைகளும் தீர்க்கப்படாத பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய பல்வேறு தீர்மானங்களுடன் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பயன் பெரும் வகையில் போதுமான நிதி உதவியுடன் அறிவியல் பூங்கா அமைப்பதற்கும், இதேபோல பொதுமக்களின் நலன் கருதி விரிவு படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு வழிவகை செய்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்தப் பகுதி சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் லோகமுத்து உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: