சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சண்முகா மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி 25 ஆம் ஆண்டு விழா. 1999 முதல் 2025-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.
சேலம் சண்முகா மருத்துவமனை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் கல்லூரி கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரியதர்ஷினி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த இந்த வெள்ளி விழா நிகழ்விற்கு, சண்முகா மருத்துவமனையில் சி.இ.ஓ. டாக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். விழாவில், கல்லூரியில் பணியாற்றிய இயன்முறை மருத்துவ பிரிவு துறை தலைவராக இருந்த டாக்டர் செந்தில் மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் முருகவேல் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கொரோனா காலகட்டத்தின் போது உயிரிழந்த பழைய மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட இந்த வெள்ளிவிழா நிகழ்வின் போது, கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2025 தற்போதைய காலகட்டம் வரை கல்வி பயின்று வரும் மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தொடக்கம் முதல் தற்போது வரை பயின்று வரும் மாணவ மாணவிகள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வரும் மாணவ மாணவியரும் காணொளி காட்சி மூலமாக தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டது சுவாரசியமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சிறந்த மாணவ மாணவிகளுக்கும் சிறந்த பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது கௌரவிக்கப்பட்டது.
இந்த விழாவில் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் முன்னாள் மாணவ மாணவிகள் தற்போதைய மாணவ மாணவிகள் என ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
0 coment rios: