சேலம்.
S.K.சுரேஷ்பாபு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழக அரசின் செயலை கண்டித்து மறியல் போராட்டம் .....300க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது ....
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சேலம், மெய்யனூர் பணிமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை காவல்துறையினர்கைது செய்தனர்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான,15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். ஓய்வூதிய தொழிலாளர்களுக்கு, 8 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
போக்குவரத்து களங்களில் காலியாக உள்ள 30,000 பணியிடங்களில் உடனடியாக நிரப்ப வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார்பில் மண்டல தலைவர் செம்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு தனது தேர்தல் காலத்தில் அறிவித்தபடி பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், வரவுக்கும் செலவுக்கும் ஆன வித்தியாசத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட செயலாளர் கோவிந்தன் மாநில துணைத்தலைவர் எஸ் கே தியாகராஜன்
செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் முருகேசன் உள்ளிட்டு 300க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.
0 coment rios: