சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பெரியாரை குறித்து இனியும் அவதூறு கருத்துகளை சீமான் தெரிவித்தால் தமிழ்நாட்டில் சீமான் நடமாடுவது சிக்கலுக்குரிய விஷயமாக மாறும். சேலம் மாநகரம் வடக்கு மாவட்ட விசிக செயலாளர் காஜா மைதீன் எச்சரிக்கை.
பகுத்தறிவு பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் குறித்து சமீப காலமாக, இயக்குனரும் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மீண்டும் ஏற்கனவே கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்குவதற்குள் மீண்டும் இஸ்லாமியர்களும், முஸ்லிம்களும் நமக்கு எதிரானவர்கள் என்று ஏற்கனவே தந்தை பெரியார் தெரிவித்ததாக கூறியிருந்தது மேலும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீமானின் இது போன்ற கருத்துக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகரம் வடக்கு மாவட்ட செயலாளர் காஜாமைதீன் கூறுகையில், தமிழகத்தில் ஒரு பதட்ட நிலையை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தோடு முன்பெல்லாம் ஆர்எஸ்எஸ் பிஜேபினர் போற்றுதலுக்குரிய தலைவர்களை இழிவாக பேசி அல்லது மத விவகாரங்களை தூண்டி தமிழ்நாட்டில் பதட்டத்தை உண்டு பண்ண முயற்சி செய்வார்கள் என்றும், பிஜேபினரும் ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர்களும் அதன் வாரிசான சீமான் பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் என்றும், பெரியார் அம்மாவோடும் பெற்ற மகளோடும் உறவு கொள்ள சொன்னார் என்ற அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கி பேசியுள்ளார்.
இன்று வரை அப்படி பேசியதற்கான ஆதாரத்தை பல தலைவர்கள் கேட்டும் சீமானால் பெரியார் இப்படி பேசியதற்கான எந்த ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை என்றும் தெரிவித்தார். மாறாக புகழ்பெற்ற தலைவர்களை இழிவாக பேசுவதன் மூலமாக ஊடக வெளிச்சம் தன் மீது விழும் என்ற கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடாக தொடர்ந்து பெரியாரை அவதூறாக பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்த காஜாமைதீன், சீமான் கூறுகிறார் பெரியார் ஆர்எஸ்எஸோடு தொடர்பில் இருந்தார் என்று. அதற்கும் ஆதாரம் இல்லை ஆனால் எங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என்றால், சீமான் பேசியவுடன் சீமானின் கருத்துக்கு உடனடியாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவிக்கிறார். சீமான் கருத்தை வரவேற்பதாக கூறுகின்றார் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் சீமான் கருத்தை வரவேற்பதாக தெரிவிக்கிறார். அதேபோல ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் உடன் கூட்டணியில் உள்ள தலைவர்கள் அத்தனை பேரும் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றும், சீமான் அவர்களை நாங்கள் ஒரு நாளும் அவரை விமர்சித்து பேசியதில்லை, மாறாக அவரால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமியை அந்த பெண் பேசிய பேச்சுக்கள் இன்று வலைதளத்தில் உலா வருகிறது. ஒரு பெண் உரிமை போராளிகள் அந்த பெண் பாதிக்கப்பட்ட பெண்ணின் பேச்சை கேட்டால் சீமானின் ஒழுக்கம் என்னவென்று தமிழக மக்களுக்கு தெரியும் இதன் மூலம் ஒரு இழிவான அரசியலுக்கு வித்திட்டுள்ளார் சீமான் என்று கூறிய காஜா மைதீன், பெரியாரை தொட்டவர்கள் தமிழ்நாட்டில் அரசியலில் வென்றதில்லை என்ற அந்த உண்மை சீமானுக்கு தெரியவரும் என்றதோடு, எதிர்வரும் தேர்தல் சீமானுக்கு மிகப்பெரிய சிக்கல் கூறியதாக மாறும் தமிழக மக்கள் பெரியார் பெரியாரிய உணர்வாளர்கள் சீமானுக்கு தக்க பாடம் சொல்லி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தார். சீமான் தொடர்ந்து இதுபோல பெரியாரை அவதூறு கருத்துகளை சீமான் தெரிவித்தால் தமிழ்நாட்டில் சீமான் நடமாடுவது சிக்கலுக்குரிய விஷயமாக மாறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தனது ஆதங்கத்தை ஆவேசமாக வெளிப்படுத்தினர் வீசிக சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் காஜாமைதீன்.
0 coment rios: