சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளையில் கலை கட்டிய பொங்கல் திருவிழா. பாரம்பரிய உடையில் வந்திருந்து விழாவை அசத்திய மாணாக்கர்கள்.
தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைத்திருவிழா வரும் 14ஆம் தேதி உலகத் தமிழர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருவிழாவை வரவேற்கும் இடமாக அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொங்கல் விழா தற்பொழுதே கலைக்கட்ட துவங்கி உள்ளன.
இதன் ஒரு பகுதியாக சேலம் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தில் தைத்திங்களை வரவேற்கும் விதமாக பொங்கல் விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கரோலின் எபி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சேலம் மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி துணை இயக்குனர் ரவிச்சந்திரன் உட்பட அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் செங்கரும்பு மஞ்சள் கொம்புகளுடன் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்த நிர்வாகத்தினர் பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் திருவிழாவை வரவேற்றனர். தொடர்ந்து இயற்கைக்கு நன்றி தெரிவித்ததை எடுத்து பொங்கல் அனைவருக்கும் பிரசாதங்களாக வழங்கப்பட்டன. இதனை அடுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மானாக்கர்களுக்கு நடனப்போட்டி பலூன் ஊதி உடைத்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தில் கலை கட்டியது.
தை திங்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, சேலம் ஜெனிஸ் கல்வி அறக்கட்டளை நிறுவன பயிற்றுநர்கள் சுமதி தேன்மொழி இசை மற்றும் காயத்ரி ஒரு லிட்டர் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: