சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா. பொங்கல் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய பள்ளி குழந்தைகள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உலகத் தமிழர்களால் நாளை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதே போல அரசு மற்றும் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் செங்கரும்பு மற்றும் மஞ்சள் கொம்புகள் உட்பட மங்களப் பொருட்களை வைத்தும், புது பானையில் பொங்கலிட்டும் இயற்கைக்கு நன்றி செலுத்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பள்ளியின் தாளாளர் நரேஷ் கிங்கர் மற்றும் ஸ்ரீ சிந்து கல்வி அறக்கட்டளை தலைவர் ராம்சந்த் கிங்கர் ஆகிய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவினை வரவேற்று பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் ஒரு சேர கூறி சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பொங்கல் கலை விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொங்கல் பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடி தங்களது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
இதனை அடுத்து பேசிய பள்ளி நிர்வாகிகள் நரேஷ் கிங்கர் மற்றும் ராம்சந்த் கிங்கர் ஆகியோர் பள்ளி குழந்தைகளிடையே பொங்கல் விழாவை ஒட்டி தொடர்ச்சியாக பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டில் பொழுது போக்கு உள்ளிட்ட அம்சங்களுடன் கழிக்காமல் இந்த விடுமுறை நாட்களை நன்கு பயன்படுத்தி வீட்டிலேயே கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கும் பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் பொங்கல் வழங்கி மகிழ்தனர் பள்ளி நிர்வாகத்தினர்.
0 coment rios: