சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சமத்துவ பொங்கல் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் கொண்டாடி மகிழ்ந்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர்.
உலகத் தமிழர்களால் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பாக சேலம் பெரமனூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் அருகே சமத்துவ பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன.
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாநிலத் துணைத் தலைவர் ஈரோடு ஜெயராமன், வழிகாட்டு குழு தலைவர் ஆசிர்வாதம் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த விழாவில், 11-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி வசந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். சமத்துவ பொங்கல் விழா எழுச்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற தைப்பொங்கலை சிறப்பிக்கும் விதமாக சிறுவர்களுக்கு சாக்கு பை கட்டி எதிரி குதித்து வரும் போட்டி, வயிற்றில் முறுக்கு கட்டி எகிரி சாப்பிடும் போட்டி, சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான டீ ஸ்பூன் எலுமிச்சை பழம் போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், உறியடித்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி, குவளையில் தண்ணீர் நிரப்புதல் போட்டி, பலூன் ஊதி உடைத்தல் போட்டி மற்றும் கூடையில் பந்து ஏறுதல் போட்டி ஊழிட்டவைகள் நடத்தப்பட்டன.
இதில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த சமத்துவ விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற நபர்களுக்கு முதல் மூன்று பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு ஆகியவையும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் அமைப்பின் மாநகர தலைவர் முருகன் மாணவரணி செயலாளர் சார்லஸ் உட்பட நிர்வாகிகள் சித்தையன் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: