சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
9 புதுப் பானைகளில் பொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த 9 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர்.
கலை இலக்கியம் பண்பாடு கலாச்சாரம் என அத்தனையிலும் முத்தாய்ப்பாய்த் திகழும், உலகின் மூத்த மொழி தமிழ் மொழியை உயிரெனக் கருதிக் காத்துப் போற்றிடும் உலக தமிழர்களால் வெகு உற்சாகமாக தை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியில் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் தனது கோட்டத்திற்கு உட்பட்ட வாய்க்கால் பட்டறை பகுதியில் 9 புதுப்பானைகளில் துப்புரவு பணியாளர்களால் பொங்கல் இடப்பட்டு இயற்கைக்கு நன்றி செலுத்தும் இதமாக தமிழர் திருவிழாவினை கொண்டாடினார்.
சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர் இராசி சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த சமத்துவ பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார். 9 புதுப் பானைகளில் பொங்கலிடப்பட்டு பொங்கல் பொங்கி வரும் போது அங்கு திரண்டு இருந்த அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்து கோஷம் முழங்க இயற்கைக்கு நன்றி செலுத்தி சிறப்பு பூஜையினை மேற்கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் காண தயாராக இருக்கும் சீறிப்பாயும் காளைகளுக்கும் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு இயற்கைக்கு நன்றி செலுத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கட்சி நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அந்த பகுதி முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கழண்டு கொண்டனர்.
0 coment rios: