இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எந்த விதி மீறலும் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். எந்த அதிகாரத்தையும் பிரயோகிக்கவில்லை.
நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, போட்டி இருக்கத்தான் செய்யும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தந்தை பெரியார் குறித்து பேசிய பிறகு இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் போட்டியிடுவது குறித்து கேட்ட போது தற்போது இதுகுறித்து எதையும் கூற முடியாது.
எந்த விதி மீறலும் இல்லை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். ஏற்கனவே கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் பிரச்சாரத்திற்கு செல்லும் போது பொதுமக்கள் கருத்து தெரிவித்தால் தேர்தல் முடிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுக எம்பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாக்குகளை சேகரித்தனர்.
0 coment rios: