சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
திருவள்ளுவர் தினம் இன்று உலக தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு கட்சியின் விளையாட்டு அணி மாநில செயலாளர் பிரசாத் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில், உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: