சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை மற்றும் மக்கள் சட்ட உரிமை கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
திருவள்ளுவர் தினம் இன்று உலக தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை மற்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் திருவள்ளுவர் தினமான இன்று அவரது திருவுருவ சிலைக்கு அமைப்புகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் மற்றும் ஆர்.வி.பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, 1330 குறள்கள் அடங்கிய புத்தகத்தையும் அமைப்பின் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் மிகவும் இக்கட்டான சூழலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையில் ஏறி மாலை அணிவித்து மரியாதை செய்ய மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
ஆகவே இந்த அசவுகரியத்தை நீக்கி பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் எளிமையாக மேலே சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும் சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: