சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஒரு நாள் மாணவியர் அனுபவம் நிகழ்வு. கல்லூரி வாழ்க்கை வாய்ப்பை இழந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்நாள் கனவினை நிறைவேற்றிக் கொண்டனர்.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில், ஒரு நாள் மாணவியர் அனுபவம் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது. தனித்துவமான மற்றும் அழகான அர்த்தமுள்ள இந்த நிகழ்வில் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த 18 வயது முதல் 60 வயது உடைய பெண்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருந்த இந்த நிகழ்வினை ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் கைலாசம், தாளாளர் செந்தில்குமார், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பங்கேற்பாளர்கள் வருகையால் கல்லூரி வளாகம் உற்சாகத்துடன் கலை கட்டியது என்றே கூறலாம்.
பலரின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறியது. மேலும் அவர்கள் மாணவியராக இருக்கும் மகிழ்ச்சியை மீண்டும் அனுபவித்தனர். அவர்கள் வாழ்க்கையில் நினைவில் கொள்ளத் தக்க ஒரு நாளாக இந்த நாள் அவர்களுக்கு பொன்னாலாக அமைந்திருந்தது என்பது நிதர்சனம்.
பங்கேற்பாடுகளுக்கு துடிப்பான கல்லூரி அனுபவத்தை வழங்குவதற்காக இந்த நாள் மிகவும் கவனமாக நடத்தப்பட்டது. குறிப்பாக வகுப்பறையில் கற்றல் அனுபவம், கேண்டீன் உரையாடல்கள், நூலக படிப்பு, திறன் அமர்வுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் முதல் நாளான இன்று நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தற்பொழுதைய கல்லூரி மாணவர்கள் ஆகவே மாறி ஒருவருக்கொருவர் இயல்பாக பழகி தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமல்லாமல் பலருக்கு இந்த நாள் ஆசையை நிறைவேற்றுவதற்கான நாள் மட்டும் அல்ல. கற்றல் மற்றும் மகிழ்ச்சிக்கு வயது வரம்புகள் இல்லை என்ற எண்ணத்தை உண்டாக்கும் வகையில் அமைந்தது என்றே கூறலாம்.
0 coment rios: