S.K. சுரேஷ்பாபு.
சென்னையில் கைது செய்யப்பட்ட பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணியை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது.
சென்னைஅண்ணா பல்கலை கழக பெண் பாதிப்பை கண்டித்து போராட்டம் செய்யவிருந்த பசுமை தாயகத் தலைவர் சௌமியா அன்புமணி அவர்கள் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சேலத்தில் சட்டமன்ற உறுப்பினர் இ.ரா.அருள் அவர்கள் தலைமையில் சேலம் கோட்டை மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்ட செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
மாவட்டத் தலைவர் கதிர் ராஜா ரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பு தலைவர் வக்கீல் குமார், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.பி சதாசிவம், மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் பாப்பா கணேசன், பகுதி செயலாளர்கள் சின்னசாமி, அண்ணாமலை, சோடா சண்முகம், ஏ. கே நடராஜன், சிவா, கணேசன், சமயா, மாவட்டத் துணைச் செயலாளர் சேகர், சங்கர், செவ்வ ரவி, பூக்கடை சுந்தரம், ஆட்டோ சின்னத்தம்பி, இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார், அன்புமணி தம்பிகள் படை செயலாளர் இளவரசன் ஐயர் கலந்து கொண்டனர்.
0 coment rios: