சனி, 25 ஜனவரி, 2025

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மத்திய மாநில எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சரஸ்ராம் ரவி அறிக்கை வெளியீடு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கூட்டு  நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும் மத்திய மாநில எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி அறிக்கை வெளியீடு.


இதுகுறித்து சரஸ்ராம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வேங்கை வயல் வேடிக்கை.

பட்டியலின மக்களை மனிதராக பார்க்கபடுவதில்லை.
சட்டம் ஒரு புறம்- அதை அமுல்படுத்த மறுகின்ற  வருவாய்/ காவல்  அதிகாரிகள் மறுபுறம்.
1989 ல்  சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம்  அறிமுகம்.
ஆனால் அமுல்படுத்தாமல் பல ஆண்டுகள் கடந்து 2005  வரை மறுப்பு.
பிறகு சட்டத்தில்  சில மாற்றம்- விதிகள்.
2015 ல் சட்டத்தில் மீண்டும்  மாற்றம்.
சாதிய வன்கொடுமை சடத்தை முழமையாக எந்த மாவட்டத்திலும் அமுல்படுத்த மறுக்கும் காவல் துறை/ வருவாய் துறை.
புகார் பெற்ற  24 மணி நேரத்தில் வழக்கு பதிய வேண்டும்.
24 மணி தேரத்தில் சம்பவ இடத்தில் உயர் வருவாய் அதிகாரிகள் , காவல் துறை அதிகாரிகள் களம் காண வேண்டும். 
அவர்கள் அவ்வாறு நடப்பது இல்லை.
அந்த சட்டத்தை முழமையாக யாரும் உணர்ந்து செயல்படுவதில்லை.
அதைவிட மோசம்..
அந்த சாதிய வன்கொடுமை சட்டத்தை பட்டியலின மக்களுக்கு10 %  கூட தெரிவதில்லை அறிவதில்லை.( படித்தவரும்/ பணியிலிருப்பவரும் )
இந்த நெறிமுறைகள் எல்லாம் கடைபிக்காத அரசு நிர்வாகம் வேங்கைவயல் நிகழ்வு அவலம்  தோழிரிந்து காட்டபடுகின்றது.
இந்த சட்டத்தின் சிறப்பு என்னவென்றால் குற்றம் சாட்டபட்டவரே, குற்றவாளியே குற்றத்தை சிறப்பு நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும்.
புகார் அளித்தவர் அல்ல.
ஏட்டளவில் சட்டம் / பட்டியலின ,பழங்குடி மக்களின் பரிதாப நிலை.
தமிழகத்தில் 120 லட்சம் பட்டியலின, பழங்குடி மக்கள் ஒன்று சேர வேண்டும்
அரசியல் அதிகாரம் பெற போராட வேண்டும்.
பிற கட்சிகளை நம்பி பிழைக்க கூடாது.
2026 ல் தமிழகத்தில் உள்ள 120 லட்சம் வாக்கு யாருக்கு ? முடிவெடுக்க வேண்டும். என்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கையை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சரஸ்ராம் ரவி தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். 



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: