சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே அதிகாரிகள் பங்கேற்காமல் நடைபெற்ற கிராம சபை கூட்டம். கண்துடைப்பிற்காக நடத்தப்படும் கூட்டத்தில் தங்களது கோரிக்கை நிறைவேறாது என்று கிராம மக்கள் புறக்கணிப்பால் பரபரப்பு.
இந்திய திருநாட்டில் 76 வது குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக முழுவதும் மாநகராட்சி நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் இன்று நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக சேலம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளோ அல்லது பள்ளிப்பட்டி பஞ்சாயத்து அதிகாரிகளோ கலந்து கொள்ளாத கூட்டத்தால், பஞ்சாயத்து நிர்வாகத்தின் அலுவலர்கள் மட்டுமே கலந்து கொண்ட கூட்டம் கிராம மக்களிடையே மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
இதனை அடுத்து பள்ளிப்பட்டி பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்திற்கு, பள்ளிப்பட்டி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் நல பணி அலுவலர் கோமதி, ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர் சுசீலா கிராம நிர்வாக உதவியாளர்கள் சம்பூரம் அலமேலு மங்கை உள்ளிட்டவர் முன்னிலை வகித்தனர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இருந்த மக்களுக்கு இடையே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ராம்ஜி, கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் ஆகியோர் பள்ளிப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். குறிப்பாக இங்குள்ள அரசு பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை செவி சாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டிய பொதுமக்கள், கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கழிவு நீர் கால்வாய் அமைக்கும் திட்டப்பணியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து ஏராளமான புகார்கள் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் நடைபெறும் ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தின் போதும் பள்ளிப்பட்டி கிராம பஞ்சாயத்து தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதிகாரிகளே இல்லாமலும் கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்கள் தங்களுக்கு எப்பொழுதும் நிறைவேற்றி தரப் போவதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களின் போது துறை சார்ந்த அதிகாரிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்ட இந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த சமூக ஆர்வலர் ராம்ஜி உட்பட கிராம மக்கள், மாற்று தேதியில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தகுந்த அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்களது கோரிக்கைகளை தற்பொழுது வரை நிறைவேற்றி தராத பள்ளிப்பட்டி கிராம பஞ்சாயத்து நிர்வாகம் இதுபோன்ற கிராம சபை கூட்டங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளை யாவது நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் பொது மக்களுக்கு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் பெரும் ஏமாற்றமாகவே அமைந்திருந்தது என்பது நிதர்சனமான உண்மை.
0 coment rios: