சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முழு ஆதரவு.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கியது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. கோபி அருகே உள்ள ஓடத்துறையைச் சேர்ந்த மா.கி.சீதாலட்சிமி வேட்பாளர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர்) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி அறிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் அரசியல் பிரிவு மாநில தலைவர் பழ. முரளிதரன் தலைமையில், அவருடன் இணைந்து வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தீவிர பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.
0 coment rios: