S.K. சுரேஷ்பாபு.
நடப்பாண்டாவது விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலத்தில் மாட்டுப் பொங்கல் சீறும் சிறப்புமா நடைபெற்றது. ஏற்காடு அடிவாரம் வினாயகம்பட்டி பகுதியில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் மாட்டுப் பொங்கல் விமர்சையாக கொண்டாடப்பட்டது. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடினார். மேளதாளம் முழங்க கால்நடைகளுக்கு சீர்வரிசை கொண்டு வந்து அவைகளுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினார்.
பின்னர் இயற்கை வணங்கும் விதமாக பூஜை செய்து தான் வளர்த்து வந்த பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்தனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இந்தாண்டாவது உரிய விலை கிடைக்க வேண்டும் விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
0 coment rios: