S.K. சுரேஷ்பாபு.
நாமக்கல் அருகே பட்டியலினத்தைச் சார்ந்த இளைஞர் பத்துக்கும் மேற்பட்ட மர்ம நபர்களால் வெட்டி படுகொலை. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முயற்சியின் காரணமாக நான்கு குற்றவாளிகள் கைது.
நாமக்கல் மாவட்டம்- வேலகவுண்டம்பட்டி கிராமத்தின் பட்டியலின குடும்பத்தை சார்ந்த சஞ்சை என்கிற 22 வயது இளைஞர் கடந்த 01-01-25 மாலை 8 மணி அளவில் சில தீய சக்திகள் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சஞ்சயை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பிரச்சனை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு கோர்ட் நடவடிக்கை குழுவில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி அவர்களை அணுகி உள்ளனர்.
குற்றவாளிகளை கைது செய்யும் வரை இறந்துபோன சஞ்சை உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையை வற்புறுத்தி உள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் இந்த படுகொலை சம்பவத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாமல். இருப்பது வேதனையாக உள்ளது என்று சஞ்சயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி வந்த நிலையில், நாமக்கல் காவல் துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த படுகொலையை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் நாமக்கல் காவல்துறையினர்.
பாதிக்பட்ட பட்டியலின குடும்பத்திற்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு போட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, உட்பட ஜெயக்கொடி, பழ. முரளிதரன், பாபு மற்றும் ஜேசுபாதம் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
0 coment rios: