சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஊர் மக்களுடன் NHAI திட்ட இயக்குனர் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ராமதாஸ் முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1 வது கோட்டம் மாமாங்கம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) புதிதாக கட்டப்படும் பாலத்தில் இணைப்புபாலம் அமைத்து தர வேண்டி மக்களுடன் இணைந்து NHAI திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் இராமதாஸ் தலைமையில் ஊர் பொதுமக்கள் போராட்டம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இது குறித்து தகவல் இல்லை சேலம் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் சம்பந்தப்பட்ட திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான ஊர் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அலுவலகத்துக்கு பூட்டு போட சென்ற பொழுது போலீசார் மற்றும் அலுவலகத் திட்ட இயக்குனர் சீனிவாச ரெட்டி ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்பொழுது ஆவேசமடைந்த சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் இராமதாஸ், தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டும் பாலத்திற்கு அருகே இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் தற்பொழுது வரை அதனை செய்யாத திட்ட இயக்குனர் அலுவலகம் எனது சட்டமன்ற தொகுதிக்குள் இருக்கக் கூடாது. எனவே அதற்காக பூட்டு போடுகிறேன் என்று ஆதங்கப்பட்ட அவர், எனது தொகுதி பொதுமக்களுக்கு பயன் தராத திட்ட இயக்குனர் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தீர்வேன் இது எனது தாய் மீது சத்தியம் என்று கோபத்துடன் பேசியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எடுத்து பேசிய திட்ட இயக்குனர் அலுவலக அதிகாரிகள், பாலத்தின் வேலையை உடனே நிறுத்துவதாக உறுதி அளித்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றுகிறேன் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மேலும் அதிகாரிகள் கூறிய உறுதி மொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் புதிய இணைப்பு பாலம் கட்ட தவறும் பட்சத்தில் ஊர் பொதுமக்களுடன் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் படுத்து ஊர் பொதுமக்களுடன் மிகப்பெரிய அளவிலான மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த போராட்டத்தின் போது, மாநில பசுமை தாயக இணை செயலாளர் சத்ரிய சேகர், ஆட்டோ சின்னத்தம்பி, ஊத்து கிணறு பிரகாஷ், செந்தில், பழனி, மாவட்ட மகளிர் அணி கிருஷ்ணம்பாள், மாவட்ட அன்புமணி தம்பிகள் செயலாளர் இளவரசன், சிவராஜ், துரைராஜ், RM ரவி, செல்வம், மணிவேல், முருகன், பாலு மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: