ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்கு பதிவு.
இன்று காலை தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதி இன்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக ஈரோடு நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரம் செய்ய 48 மணி நேரத்திற்கு முன்பாக உரிய அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் விதி உள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறவில்லை என தேர்தல் பறக்கும் படையினரின் புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 coment rios: