ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி இன்று சூரியம்பாளையம் பகுதி அன்னை சத்யா நகர் பகுதி சுற்றுப்புறங்களில் உள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் சந்திரகுமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அவருடன், மஜக மாநில துணை செயலாளர் ஈரோடு எச்சான், மாவட்ட செயலாளர் ஜாவித் பஜல், மாவட்ட அவை தலைவர் முஹமது ஹாரிஸ், தேர்தல் பணிக்குழு திலீப் குமார், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அமீன் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: