சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் நாடக கலைஞர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி மகிழ்ந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் நாடக கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலைஞர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
அதிமுக இளைஞர் அணியின் மாநில துணை செயலாளரும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏபி சக்திவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகை காண சிறப்பு தொகுப்பு மற்றும் புத்தாடைகளை வழங்கி நாடக நடிகர்களுக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கும் தனது பொங்கல் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாசலம் மற்றும் சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: