S.K. சுரேஷ்பாபு.
தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம். சேலம் புத்தூர் அக்ரஹாரம் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சிரத்தை அடுத்துள்ள புத்தூர் அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் நடைபெற்றது. வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த சாதனை விளக்க பொதுக்குழு கூட்டத்தில், வீரபாண்டி தொகுதி சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் கிருபாகரன், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட பொறுப்பாளர் ஃபிரண்ட்ஸ் ரமேஷ், ஆட்டையாம்பட்டி பேரூர் கழக தலைவர் முருக பிரகாஷ், இளம்பிள்ளை பேரூர் கழக செயலாளர் குப்பம்பட்டி சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகுத்தனர்.
தமிழக அரசின் இந்த சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் டி எம் செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், திமுக பேச்சாளர் தூத்துக்குடி சரத் பாலா, மாநில தொழில் நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர் தருண் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மலர்விழி ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து தேர்தலின் பொழுது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் அறிவிக்கப்படாத வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தியது குறித்து பட்டியல் இட்டு பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக வீரபாண்டி ஒன்றியத்தின் சார்பில் 2025 காண நாட்காட்டி பொதுக் கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: