சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி அசைவ விருந்து படைத்து மகிழ்ந்த மாமன்ற உறுப்பினர்.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை தமிழக முழுவதும் திமுகவினரால் மிகவும் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக சேலம் மாநகரில் உள்ள 60 கோட்டங்களிலும் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா விளையாட்டு விழா நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை எழுச்சியாக கொண்டாடும் விதமாக மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதன் அடிப்படையில் சேலம் மன்னார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் ஆக்கபூர்வமான விளையாட்டு போட்டியாக நடத்த வேண்டும் என்பதற்காக குழந்தைகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தியன் விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தங்களது வயதை மறந்து உற்சாகத்துடன் ஆடி, பாடி மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் 9-வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் பாடல்களைப் பாட மேடையில் இருந்த ஆண்கள் அதற்கேற்றவாறு நடனமாடியது அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
இதனை அடுத்து விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அசைவ விருந்து படைத்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தார் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் ராஜா லோகு முருகன் உன்னிடம் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: