சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அருந்ததியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் சில்வர் மெட்டல் பெயர் பலகை அமைத்திட வலியுறுத்தி அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
சேலம் மாவட்ட அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஸ்தம்பட்டி பகுதி தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் வீரபாண்டி கண்ணன் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் திருமலை மேற்கு மண்டல செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில தலைவர் லோகேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அருந்ததியர் மற்றும் தாழ்த்தப்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகராட்சி 8-வது கோட்டத்திற்கு உட்பட்ட சின்ன திருப்பதி காந்தி நகர் பகுதி உட்பட சேலம் மாநகரம் மாவட்டம் ஏன் தமிழக முழுவதும் உள்ள அருந்ததியர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வரும் பகுதிகளில் சில்வர் மெட்டல் பெயர் பலகை அமைத்திட வேண்டும், அவர்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட வேண்டும், தெருக்களில் சாலை வசதி மற்றும் பொது கழிப்பிடம் புணரவைப்பு செய்து தர வேண்டும் மற்றும் பொதுக் கழிப்பிடம் அருகில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள் தனசேகர் பூபதி பார்த்திபன் கார்த்திக் அய்யனார் தீபக் குமார் ரமேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: