சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
காலம் சென்ற தமிழக வேளாண் துறை அமைச்சர் போற்றுதலுக்குரிய வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்திருந்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரின் அரைவேக்காடு தனமான அறிக்கைக்கு, வழக்கறிஞர் ராஜேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும். பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் சேலத்தில் ஆவேச பேட்டி.
சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் மற்றும் மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் கூட்டாக சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலா துறையின் அமைச்சருமான வழக்கறிஞர். ராஜேந்திரன் அவர்களை கண்டித்து பகிரங்கமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர்.
இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முன்னாள் சேலம் மாவட்ட திமுக செயலாளர் ஆகவும், முன்னாள் தமிழக வேளாண்மை துறை அமைச்சருமாக இருந்த மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பெற்று தந்திருப்பார் என்று கூறிய அவர்கள், கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் மறைந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளர் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் சிலை வைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் இரண்டு முறை குரல் எழுப்பியும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் அவர்களின் அரைவேக்காடுத்தனமான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய அவர்கள், பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் கொடுத்ததால் மட்டுமே வழக்கறிஞர் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் சேலத்தில் ஆவேசமாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: