சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு முழு ஆதரவு.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கியது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளருக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு தனது முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் V.C. சந்திரகுமாருக்கு தங்களது தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு முழு ஆதரவை தருவதாகவும், தமிழக அமைச்சர் முத்துசாமி தலைமையில், தங்களது அமைப்பு பல்வேறு குழுக்கள் அமைத்து ஒரு வாரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த டாக்டர் நாக அரவிந்தன், தமிழக அரசின் நல்ல பல திட்டங்கள் குறித்தும் தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் பட்டியலிட்டு பிரச்சாரம் செய்வதோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வீ.சி சந்திரகுமார் அவர்களை வெற்றி பெறச் செய்வோம் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஓஷோ முரளி, கேசவன் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 coment rios: