அந்த வகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 237 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று பூத் சிலிப் (வாக்காளர் தகவல் சீட்டுகள்) விநியோகம் செய்யும் பணி கடந்த 26ம் தேதி தொடங்கியது.
மேலும், பூத் சிலிப் விநியோகம் செய்து பணி வரும் 31ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டு 20 டவர் லைன் காலனி மற்றும் திருமால் நகர் ஆகிய பகுதிகளில் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வாக்காளர்களிடம் வாக்குச்சாவடியில் பிப்ரவரி 5ம் தேதி வாக்களித்து ஜனநாயக கடமையை நிலைநிறுத்த வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் தகவல் சீட்டு பொறுப்பு அலுவலர் சசிகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: