S.K. சுரேஷ்பாபு.
தமிழர் திருநாளான கைத்திருவிழாவையொட்டி பொங்கல் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி மகிழ்ந்த வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர்.
ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதன் அடிப்படையில் நடைபாண்டிற்கான பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகளை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் மூலமாக இலவச வேட்டி செயல்களுடன் கூடிய கரும்பு உட்பட பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில், வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளரும், அட்மா குழு தலைவருமான திருமதி.S.வெண்ணிலா சேகர் அவர்கள் அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி நியாய விலைக்கடையில் கலந்து கொண்டார். மேலும் விழாவில் கலந்து கொண்ட அவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலைகளுடன் கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பினை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கிருத்திகராஜா, கிளை கழக செயலாளர்கள்,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 coment rios: