சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவிற்காக பத்தாம் ஆண்டாக முருக பக்தர்கள் காவடி தூக்கி பழனிக்கு பாதயாத்திரை புறப்பாடு.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்கு தை மாதம் பங்குனி மாதம் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இது போன்ற காலங்களில் பக்தர்கள் விரதமிருந்து பால் கவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக சென்று எம்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் வரும் தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாநகரம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனி மலை பாதயாத்திரை நண்பர்கள் குழு சார்பில் பத்தாவது ஆண்டாக தைப்பூச திருவிழாவிற்காக பழனிக்கு பாதயாத்திரையாக 1000க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் காவடி தூக்கியவாறு முருகன் வள்ளி தேவயானி வேடமடைந்து பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள சேலம் ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பழனிக்கு ஊர்வலமாக பாதயாத்திரை மேற்கொண்டனர்.
முன்னதாக ராஜரிஷி ஆசிரமத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு இன்று காலை முதலே பல்வேறு மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு எம்பெருமானுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் முருகன் வள்ளி தேவயானி வேடமடைந்து சென்றது பார்ப்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பாதயாத்திரை மேற்கொண்ட முருக பக்தர்கள் ஆயிரம் பேருக்கு ராஜரிஷி ஆசிரமத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது
இந்த பாதை யாத்திரை பயணத்தை சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள சேலம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆசிரம நிறுவன ராஜரிஷி பாபு பாதயாத்திர துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணி, வாசுகி, வசியா விக்ரம் அருண் யோகேஷ் மற்றும் சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: