சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க இணைந்த மாபெரும் இணைப்பு விழா. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வத்துடன் தங்களை இணைத்துக் கொண்டதாக பெருமிதம்.
கோலிவுட் திரை உலகின் நட்சத்திர நடிகரும், அவர்களது ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தமிழகத்தில் அரசியல் பிரவேசம் செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள ஏராளமான ஆர்வத்துடன் முன் வந்து தங்களை நடிகர் விஜய் தலைமையின் கீழ் செயல்படும் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாநகரம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் த.வெ.கவில் தங்களை இணைத்துக் கொள்ளும் மாபெரும் இணைப்பு விழா ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியா பட்டணம் அன்னை கஸ்தூரிபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் தெற்கு ஒன்றிய தலைவர் அமர்நாத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் இணைப்பு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் திமுக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தங்களை த.வெ.கவில் தங்களை ஆர்வத்துடன் இணைத்து கொண்டனர்.
கட்சியில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்தி வரவேற்று மகிழ்ந்தார். மேலும் இந்த கட்சியில் இணைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கட்சியில் இணைந்து விட்டு ஆர்வத்துடன் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபனுடன் செல்பி எடுத்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக சேலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் இதேபோன்று நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழா சேலத்தை அடுத்துள்ள வலசியுரிடம் நடைபெற்றது. அந்த நிகழ்விலும் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தங்களை ஆர்வத்துடன் இணைத்து கொண்டதை பார்க்க முடிந்தது.
இந்த மாபெரும் இணைப்பு விழா குறித்து தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தளபதி விஜய் அவர்களின் தலைமையில் செயல்படும் கட்சியில் பொதுமக்களும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆகியோர் ஆர்வத்துடன் இணைந்து வருவது தங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றும், உறுப்பினர் சேர்க்கைக்கு கட்சியின் சார்பில் எந்தவிதமான ஏற்பாடும் செய்யாத பட்சத்திலேயே இவ்வளவு பேர் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர் என்றும் வரும் காலங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக தமிழக வெற்றி கழகம் திகழும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியின் தலைவரும் கட்சியின் தலைமையும் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் வேதநாயகம், நகர தலைவர் வெங்கடேஷ், நகர இணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் தொண்டர் அணி செயலாளர் கார்த்தி உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: