சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழர்களின் பாரம்பரியமிக்க சண்டை சேவல்களை பறக்கவிடும் நிகழ்ச்சியுடன் கலை கட்டிய கல்லூரி பொங்கல் விழா. சேவல்கள் பறந்து தாக்குவதை ஆச்சரியத்துடன் கண்டு வியந்த கல்லூரி மாணவர்கள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் வைபவம் வரும் 14ஆம் தேதி உலகத் தமிழர்களால் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. தைத்திருநாளை வரவேற்கும் விதமாக சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று சூரிய பகவானுக்கு தங்களது நன்றியினை செலுத்திய வல்லம் உள்ளனர் வீர தமிழர்கள். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தைத்திருநாளை வரவேற்கும் விதமாக கல்லூரிகளில் பொங்கல் திருவிழா நடைபெற்ற ஆளுமை கூட, சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி பொங்கல் விழா மற்றும் அனைத்து கல்லூரி நிர்வாகத்தினரையும் திரும்ப பார்க்கச் செய்துள்ளது என்றால் அது மிகையல்ல.
வழக்கமாக பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் புது பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு கல்லூரி மாணவர்களின் கலை விழா நடத்தப்படுவதும், கூடுதலாக மாட்டுவண்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல் கபாடி போட்டி பெண்களுக்கே உரித்தான கோலாட்டம் குறித்த வகைகளுடன் இந்த பொங்கல் வைபவம் இனிதே நிறைவு பெரும். ஆனால் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சேலம் அம்மாபேட்டையில் உள்ள கணேஷ் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா வழக்கமாக புது பானையில் பொங்கலிட்டு கரும்புகளை படைத்தும் மஞ்சள் கொம்புகளை படைத்தும் இயற்கைக்கு நன்றி தெரிவித்ததோடு, பாரம்பரிய விளையாட்டுகளும் இதுபோக உயர் ஜாதி ஜல்லிக்கட்டு காளைகளை வரவழைத்தும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் தாளாளர் தங்கவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் விஜய கணேஷ் மற்றும் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் விமலாதித்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த விழாவின் போது, கல்லூரி மாணவர்கள் வேட்டி சட்டை அணிந்தும், மாணவிகள் தாவணி மற்றும் புடவைகள் அணிந்து நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கலந்து கொண்டனர்.
இதனிடையே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சேவல் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் சண்டை சேவல் என்றால் என்ன அவற்றை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது அவை போட்டிகளில் எவ்வாறு மற்றவர்களின் முதுகில் குத்தாமல் நேருக்கு நேராக மோதி எவ்வாறு தங்களது உரிமையாளர்களை வெற்றி பெறச் செய்கிறது என்பதை உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த சேவல்கள் பறக்க விடும் நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடனும் வியப்புடனும் கண்டு ரசித்தது நம்மால் காண முடிந்தது. சேவல் சண்டை என்றால் ஆடுகளம் உள்ளிட்ட திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த சூழலில் இதுபோன்ற சண்டை சேவல்களின் சண்டைகளை நேரில் தற்பொழுது வரை தங்களால் காண இயலவில்லை என்றும், பல்வேறு காரணங்களுக்காக சேவல் சண்டைக்கு தமிழகத்தில் தடை விதித்துள்ள தமிழக அரசு நடைபெற உள்ள தைத்திருவிழாவின் போதாவது அதற்கான தடைகளை நீக்கி சட்ட திட்டத்துக்கு உட்பட்டு காவல்துறையினரின் முன்னிலையில் இந்த போட்டியினை நடத்த உரிய அனுமதி வேண்டும் என்று மாணாக்கர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
வெத்துக்கால் kசேவல் சண்டை மற்றும் கத்திக்கால் சேவல் சண்டை நடத்தப்படுவதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்கள் உள்ளிட்ட அசௌகரிய சம்பவங்களை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது இந்த தடையை நீக்கி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக எவ்வாறு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உரிய கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியதோ அதேபோன்று எந்த ஒரு சூழலிலும் முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் நின்று எதிரியை தாக்கும் குணம் கொண்ட இந்த சேவல் சந்தைக்கு இனியாவாது இந்த வருடமாவது தமிழக அரசு அனுமதி அளித்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாக இந்த பொங்கல் திருவிழா அமைய வேண்டும் என்பது மட்டுமே சேவல் சண்டை வளர்ப்பாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
நிறைவேற்றுமா தமிழக அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.
0 coment rios: