செவ்வாய், 7 ஜனவரி, 2025

மாநில அளவிலான கோகோ போட்டியில் வலசையூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை. வெற்றி கோப்பைகளுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

மாநில அளவிலான கோகோ போட்டியில் வலசையூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை. வெற்றி கோப்பைகளுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா. 

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக 40 வது மாநில அளவிலான 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கோகோ போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது. 38 மாவட்டங்களை சேர்ந்த இந்த மாநில அளவிலான போட்டியில் சேலம் மாவட்டம் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. வெற்றி பெற்ற கோகோ அணியினரை பாராட்டும் விதமாக வலசையூர்  பகுதியில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெண்கல பதக்கம் மற்றும் வெற்றிக்கோப்பைகளுடன் மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த பேரணி மற்றும் பாராட்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன் தாய்மை வகித்தார். 
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வைத்தியலிங்கம் முன்னிலை வகித்த இந்த பேரணியை ஆடிட்டர் இளங்கோ கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது வலசையூர் அரூர் பிரிவு சாலையில் துவங்கி வலசையூர் பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வழியாக பள்ளியில் நிறைவடைந்தது. வழி நெடுங்கிலும் பொதுமக்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த விழாவில் அயோத்தியாபட்டணம் ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், கவுன்சிலர் அருண்குமார் வலசையூர் பஞ்சாயத்து தலைவர் செல்லரசி பழனிவேல், டி பெருமாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் சேலம் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தினர் சேலம் கணேஷ் கல்லூரி நிர்வாகத்தினர் வலசைவூர் கனரா வங்கி மேலாளர் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மணிவண்ணன் வடசையூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன் எஸ் ஆர் எஸ் பாலிடெக்னிக் முதல்வர் ரவி ரோட்டரி தாமரைச்செல்வன் சந்திரசேகர் ஆசிரியர் முருகேசன் ஜே ஆர் சி சேலம் மாவட்ட கன்வினர்கள் பிரபாகரன் கீதா மணிவண்ணன் அனிதா சுரேஷ் பாபு துவக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சாரணர் படை ஜே ஆர் சி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து பழியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தேசிய அளவிலான கேலோ இந்தியா கோகோ போட்டிக்கு தமிழக அனைத்து தேர்வான அஜய் குமார் என்ற மாணவருக்கும் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகின்ற முதலாவது உலக கோப்பை கோக்கோ போட்டிக்கு தமிழகத்தில் இருந்து விளம்பர தூதுவராக தேர்வு பெற்றுள்ள முன்னாள் மாணவர் கோகுல் என்பவருக்கும் நினைவு பரிசை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன் ஸ்டாலின் அன்பன் டேனியல் மற்றும் ஆசிரியர்கள் மணி மணமல்லி ரவி சுப்பிரமணி குழந்தைசாமி ரமாப்ரியா மணிவண்ணன் ருத்ர கண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: