சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் குறித்து மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று அவதூறாக பேசிய தகவல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மதிய உள்துறை அமைச்சர் அமிக்ஷாவை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது. இந்த இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி தலைமையிலும், நிர்வாகிகள் கணேசன் வடிவேல் முருகன் தலித் ராஜு ரவிக்குமார் மணிவண்ணன் மற்றும் ஜோதி ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு தெரியாமல் அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக நடத்திய பல்வேறு போராட்டங்கள் குறித்து தெரியாமல் அவர் மீது அவதூறு தகவல்களை பரப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் மாரியப்பன் வணங்காமுடி செட்டிமணி உட்பட கட்சியிn மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானோர் கலந்துகொண்டு மத்திய அரசு எதிராக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
0 coment rios: