சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பொதுக் காப்பீட்டு துறையில் இயங்கும் நான்கு நிறுவனங்களையும், ஒரே நிறுவனமாக மத்திய அரசு இணைக்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற JFTU மற்றும் பீமா சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற வாயிற் போராட்டத்தில் வலியுறுத்தல்.
மத்திய அரசுக்கு சொந்தமான பொது காப்பீடு துறையில் உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ், யுனெட்டட் இந்தியா, நியூ இந்தியா, அதிகாரிகள் ஊழியர்களின் கோரிக்கைகளை வரியுறுத்தி அகில இந்திய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பாக இன்று 1 மணி நேர வாயிற் கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் பல்நோக்கு அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பீமா சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் சரஸ்வராம் ரவி, பீமா சங்கத்தில் மாவட்ட செயலாளர் ஆர். ரத்தினவேலு, அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சுந்தரம், AIIEA அமைப்பின் கருப்பையா, GIEA அமைப்பை சேர்ந்த மணிகண்டன் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலச் செங்கத்தை சார்ந்த கண்ணன் மற்றும் முகவர்கள் நலச் சங்கத்தைச் சார்ந்த முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்தனர். இந்திய அளவில் சுமார் 50000 ஊழியர்கள் பங்கேற்றுள்ள வாயில் கூட்டு ஆர்ப்பாட்டம் குறித்து சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
01-08-22 நாள் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும், காலியாக உள்ள சுமார் 25000 புதிய பணி இடங்களை நிரப்பிட வேண்டும்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியத்தை 30% என உயர்த்த வேண்டும், SC/ ST காலி பின்னடைவு ( Backlog vacancies ) 10000 பணி இடங்களை பொது காப்பீட்டு துறையில் தேர்வு செய்ய நிரப்பிட வேண்டும், பொதுக் காப்பீட்டு துறையில் இயங்கும் நான்கு நிறுவனங்களையும் அதாவது ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ்/, யுனெட்டட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் நியு இந்தியா அசூரன்ஸ் ஆகியவற்றை ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும் மற்றும் பொது காப்பீட்டு துறையில் கடைநிலை ஊழியர்களை ( sub staff ) ஒப்பந்த தொழிலாளர்கள் கொண்டு நிரப்பிடும் அவுட் சோர்ஸ் முறையை ரத்து செய்து - நிரந்தர ஊழியர்களை மத்திய அரசு நியமிக்க நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர். இதன் காரணமாக சேலத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெரும் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து பீமா சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் சரஸ்ராம் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தங்களது இந்த முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற செவிசைக்காத பட்சத்தில் தலைமையின் ஒப்புதல் பெற்று அனைத்து விதமான போராட்டங்களையும் மிகப் பெரிய அளவில் முன்னெடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஊழியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
0 coment rios: