திங்கள், 27 ஜனவரி, 2025

சீமான் பெரியாரை பற்றி பேசியது குறித்து தேர்தல் முடிந்த பின்னர் பேசுவோம்: அமைச்சர் முத்துசாமி

சீமான் பெரியாரை பற்றி பேசுவது குறித்து தேர்தல் முடியும் வரை நாங்கள் எதுவும் பேசப்போறது இல்லை. தேர்தல் முடிந்த பின்னர் அது குறித்து பேசுவோம் என தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியளித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் பகுதி 42,43 வார்டுக்குட்பட்ட வாணியபிள்ளையார் கோயில் வீதி, வளையக்கார வீதி, ஜெயராம் சந்து, ரங்கசாமி சந்து, குப்பிபாலம் ரோடு, சொக்கலிங்கம் பிள்ளை வீதி, அக்ரஹார வீதி, அன்னைமேரி பள்ளி சந்து, பெரியார் வீதி, காரைவாய்க்கால், கோப்பெருந்தேவியார் வீதி, அருள்மொழி வீதி, நச்சிகினியனார் வீதி, கம்பர் வீதி, வெங்கிடுசாமி வீதி, மொய்தீன் வீதி உள்ளிட்ட இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாக்குகள் கேட்டு, தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், அரசு கேபிள் டிவி முன்னாள் தலைவர் குறிஞ்சி சிவகுமார், நெசவாளரணி மாநில செயலாளர் எஸ்.எல்.டி சச்சிதானந்தம் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்று வாட்டர் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த மக்களுக்கான நல திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடத்தில் எடுத்துக் கூறி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறோம்.

அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் எங்களை உற்சாகமாக வரவேற்கின்றனர். மகளிர் உரிமைத் தொகை 100-க்கு 2 சதவீத பெண்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பார். 

பெரியாரை பற்றி ஈரோடு மட்டுமல்ல உலகத்திற்கே தெரியும். அவரைப் பற்றி கூற வேண்டும் என்றால் விளக்கமாக தெரிவிக்க வேண்டும். அதற்கு இது நேரமல்ல. சீமான் பெரியாரை பற்றி பேசுவது குறித்து தேர்தல் முடியும் வரை நாங்கள் எதுவும் பேசப்போறது இல்லை. தேர்தல் முடிந்த பின்னர் அது குறித்து பேசுவோம்.

ஈரோடு மாநகராட்சிக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பது குறித்த பட்டியலை தெரிவித்திருக்கிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சர்கள் வர வேண்டாம் என்ற கட்டளை இல்லை. இப்போது வேண்டாம், இங்கு இருப்பவர்களே தேர்தல் பணியை பார்த்து கொள்ளட்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரத்திற்கு வருவார்கள் என்று நாங்கள் கூறியது கிடையாது. அது எங்களுடைய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக கூறியது. அவர்கள் வருவார்களா? மாட்டார்களா? என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: