சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை ( பறையர்களை ) இழிவுபடுத்திப் பேசிய தர்மபுரி, காரிமங்கலம் திமுக ஒன்றிய செயலாளர் இல.கிருஷ்ணனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் திமுக ஒன்றிய செயலாளர் ஆக இருப்பவர் இல. கிருஷ்ணன் இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை ( பறையர்களை ) தொடர்ச்சியாக இழிவு படுத்தி பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலித் விடுதலை கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய மூலநிவாசி காவல் படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் மற்றும் தலித் விடுதலை கட்சியின் மாவட்ட செயலாளர் நாகேந்திரன் முன்னணிலை வகித்தனர். பிஎஸ்பி மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தொடக்க உரை ஆற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில், தலித் விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் செங்கோட்டையன் மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி பேசி வரும் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் திமுக ஒன்றிய செயலாளர் இல கிருஷ்ணனை கண்டித்து கண்டன உரையாற்றினர். மேலும் திமுகவின் திராவிட மாடல் என்பது சனாதனத்தின் மற்றொரு உருவமா என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுரேஷ் பிரசாந்த் சந்தோஷ் தீனா தமிழ்ச்செல்வன் முனுசாமி அம்பேத்கர் மற்றும் வீராசாமி ஊழிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: