சேலம்.
S.K. சுரேஷ் பபு
.
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் சேலத்தில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு...
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை எரிபொருள் விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நடப்பாண்டு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு பயன்படுத்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக
சேலம் குரங்குசாவடி பகுதியில்
எரிபொருள் சிக்கனம்
குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்
நடைபெற்றது.
திருமலா ரெட்டி தொடங்கி வைத்தார். குரங்கு சாவடி பகுதியில் தொடங்கிய இந்த வாக்கத்தான், மாமாங்கம் சாலை குரங்கு சாவடி சந்தை ஐந்து ரோடு வழியாக ஜங்ஷன் பிரதான சாலையில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் வீடுகளுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யும் லைன்மென்ட்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்திபடி நடந்து வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
0 coment rios: