சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்தன நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மற்றும் பெருஞ்சாந்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சேலம் கிச்சிபாளையம் சன்னியாசி குண்டு ராமசாமி நகர் பகுதியில் சுமார் 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலினை திருப்பணி செய்து புதிய வர்ணங்கள் டிடி சாலகோபுரம் விமானங்கள் அமைத்து, புதிய கடவுள்களை பிரதிஷ்டை செய்து ஆலயம் நிறைந்த வண்ணமாய் நிறைவு பெற்று ஆடைய கும்பாபிஷேகமானது இன்று அஸ்தம் நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த எட்டாம் தேதி முகூர்த்தக்கால் முளைப்பாளிகை இடுதல் கங்கணம் கட்டுதல் ஆகியவற்றுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து நாள்தோறும் மகா கணபதி ஹோமம், பூர்ணாஹீதி, தீர்த்தக் கூட ஊர்வலம், வாஸ்து சாந்தி, சயனாதி வாசம், உள்ளிட்டவைகளுடன் ஆகவே விதிமுறைப்படி அமைக்கப்பட்ட யாகசாலையில் முதல் கால மகா பூர்ணாஹீதி உபசாரம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதனை எடுத்து விழாவில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவானது இன்று காலை நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றதை அடுத்து விமான கும்பாபிஷேகம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன் ஸ்ரீ ஐயப்பன் ஆகியோருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் உட்பட கிச்சிபாளையம் சன்னியாசி குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரங்கள் மேல் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவினை தொடங்கி மண்டல பூஜை தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாக திருக்கோவிலின் தர்மகத்தா பூபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவிலின் நிர்வாகிகள் முருகேசன் கணேசன் ரவி லட்சுமி மணிமேகலை சசிகலா வினோதினி பிரியா மைதிலி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: