சனி, 15 பிப்ரவரி, 2025

சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் லஞ்சம் லாவண்யமற்று பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர். லஞ்சத்தில் திழைக்கும் அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொறியாளர். நேர்மையாக பணியாற்றும் நபரை பணி நீக்கம் செய்ய துடிக்கும் அலங்கோலம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் லஞ்சம் லாவண்யமற்று பணியாற்றும் வணிக பிரிவு ஆய்வாளர். லஞ்சத்தில் திழைக்கும் அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொறியாளர். நேர்மையாக பணியாற்றும் நபரை பணி நீக்கம் செய்ய துடிக்கும் அலங்கோலம். 

சேலத்தை அடுத்துள்ள  நிலவாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் ஜான்.டி.செல்வா. இவர் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் உதவி பொறியாளராக திருமதி சாந்தி என்பவரும் பணியாற்றி வருகிறார். ரமணா திரைப்படத்தில் வரும் ஒரு டயலாக். ஒவ்வொரு அரசு துறை அலுவலகத்திலும் லஞ்சம் வாங்காமல் ஒருவன் பணியாற்றி வருவான் என்பது. 
இந்த டயலாக்கை படம் பார்த்த எவரும் தற்பொழுது தமிழக அரசின் பணியாற்றிக் கொண்டிருக்கும் 56 துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவரும் அந்த ஒரு வசனத்தை மட்டும் மறந்திருக்க மாட்டார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் தற்பொழுதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. 
இந்த அலுவலகத்தில் லஞ்சம் லாவண்யத்தில் திளைத்து வரும் உதவி பொறியாளர் போற்றுதலுக்குரிய திருமதி சாந்தி அவர்கள் அதே அலுவலகத்தில் பணியாற்றி வரும், லஞ்சமே பெறாமல் நீதி நேர்மை நியாயம் என்று தனது பணியை மேற்கொண்டு வரும் நிலவாறு பட்டி பகுதியை சேர்ந்த வணிக பிரிவு ஆய்வாளர் ஜான்.டி.செல்வா அவர்களின் பணி தகுதி என்ன என்பதை மறந்து ஒரு பணிக்கு அமர்த்திய பணியாளரைப் போல பீரோவை துடைப்பது மேஜையை தொலைக்க வைப்பது, அது மட்டுமல்லாமல் வாகன ஓட்டியாக பயன்படுத்துவது போன்ற சில்லறைத்தனமான பணிகளை அவரை மேற்கொள்ள வைத்து அழகு பார்த்ததோடு மட்டுமல்லாமல், இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட தன்னிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் அதே அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மத்தியில் அவரை அவமானப்படுத்தும் அளவிற்கு தற்பொழுதும் பெண் உதவி பொறியாளரின் கொடுமை அந்த அலுவலகத்தில் நீடித்து வருகிறது என்பது மட்டுமே உண்மை. இதன் முத்தாய்ப்பாக, தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு என்று அவர் சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் அவர்களிடம் விடுமுறை கடிதம் அளித்த போது அவர் அந்த கடிதத்தை உதாசீனப்படுத்தி அங்கு பாருங்கள் இங்கு பாருங்கள் என்னால் தங்களுக்கு விடுமுறை அளிக்க முடியாது என்று கூறி அந்த கடிதத்தை முகத்தில் விட்டெறிந்ததாகவும் கூறப்படுகிறது. 
அவமானம் தாங்க முடியாத சம்பந்தப்பட்ட மின்வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ஜான் செல்வா செய்வதறியாது, தனது மனைவியின் மருத்துவ விடுமுறையை முடித்து தொடர்ந்து பணியாற்ற அலுவலகம் வந்த போது சம்பந்தப்பட்ட பெண் உதவி பொறியாளர் போற்றுதலுக்கும் மாண்புமி பொருந்திய திருமதி சாந்தி அவர்கள் அவரது விடுமுறையை ஏற்காமல் தற்பொழுது வரை இன்றைய நாள் வரை அவரை பணியில் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாத காலங்களாக மாத ஊதியம் இல்லாமல் அவரது குடும்பம் மிகுந்த மன உளைச்சலிலும் சாப்பாட்டிற்கு வழி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பனமரத்துப்பட்டி இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்த வணிக பிரிவு ஆய்வாளர் ஜான் செல்வா அவர்களிடம் நாம் பேசியபோது இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்க மறுக்கும் ஒரே நபர் நான்தான் என்று ஒரே காரணத்தை காட்டி இங்கு இந்த அலுவலகத்தில் லஞ்சத்தில் மட்டுமே திளைக்கும் இந்த மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி என்பவர் எனது பணியில் தகுதி என்ன என்று தெரிந்திருந்தும் கீழ்மட்டப் பணிகளை என்னை மேற்கொள்ள செய்ததோடு மீண்டும் என்னை பணியில் சேர்க்காமல் என்னை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டினார் ஜான் செல்வா அவர்கள். 
இது குறித்து பல அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் லஞ்சம் வாங்காத ஒரே காரணத்திற்காக என்னை பழிவாங்க துடிக்கும் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு மீண்டும் பணியை மறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நம்மிடையே அவர் கோரிக்கை வைத்தார். அதுமட்டுமல்லாமல் ஏதோ ஒரு அமைச்சரின் உதவியோடு அவர் அத்துணை அதிகாரிகளையும் தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையே சம்பந்தப்பட்ட பெண் உதவி செயற்பொறியாளர் பணமரத்துப்பட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மறுக்கிறார்கள் என்று அவரது உச்ச வேதனையையும் பதிவிட்டார் நம்மிடையே. 
லஞ்ச லாவண்யா மற்ற அரசு இன்று கூறும் தமிழக அரசு அரசு துறை அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் பெற்றாலோ அத்துமீறி நடந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை துறை ரீதியாக எடுக்கப்படும் என்று பெயருக்கு அறிவிப்பு வெளியிடும் தமிழக அரசு சேலம் பனமரத்துப்பட்டி மின்வாரியத்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவி பொறியாளர் சாந்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமா. பாதிக்கப்பட்டவர் உட்பட அந்த மின்வாரிய அலுவலகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக அணுகும் பொது மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: