சனி, 15 பிப்ரவரி, 2025

சேலம் 44-வது கோட்டத்திற்கு உட்பட்ட எருமபாளையம் குப்பைமேடு சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி அமைக்க சோதனை முயற்சி.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் 44-வது கோட்டத்திற்கு உட்பட்ட எருமபாளையம் குப்பைமேடு சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி அமைக்க சோதனை முயற்சி. 

60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் 44 வது கோட்டத்திற்கு உட்பட்டது எருமாபாளையம் குப்பை கிடங்கு. ஒரு காலத்தில் மாநகரில் 60 கோட்டங்களிலும் சேகரிக்கும் குப்பைகளை இங்கு சேகரித்து வைப்பது வழக்கமாக இருந்தது. இந்த குப்பை கிடங்கால் வெயில் மட்டும் மழை காலங்களில் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை போக்க சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல நிர்வாகத்தின் சார்பில் சுமார் 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பூங்காவாக மாற்றி 100 சதவீத பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இந்த நிலையில், சேலம் மாநகராட்சியின் 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவரம்பன் ஏற்பாட்டின் பேரில்,  இந்த சுற்றுலா மையத்தில் நிரந்தரமாக  தொலைநோக்கி அமைத்து சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏதுவாக சோதனை முயற்சி எருமாபாளையம் குப்பைமேடு சுற்றுலா மையத்தின் மேல் பகுதியில் நடைபெற்றது. 
சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலக உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சோதனையின் முயற்சியின் போது பிரபல தொலைநோக்கி நிபுணர் கலந்துகொண்டு தொலைநோக்கினை அமைத்து சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ முயற்சி செய்தார். இந்த முயற்சியில் முழுமையான வெற்றியும் கிடைத்தது. சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் ஏழு கோள்களை கண்டு சுற்றுலா பயணிகள் இன்புற்றனர் என்பது நிதர்சனம். 
இதுகுறித்து சேலம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இமயவர்மன் கூறுகையில், ஒரு காலத்தில் குப்பை மேடாக இருந்த இந்த பகுதியினை சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா மையமாக மாற்றி அமைக்கப்பட்டு தொலைநோக்கி அமைத்து சூரிய குடும்ப கோள்களை சுற்றுலா பயணிகள் காண சோதனை முயற்சி நடத்தப்பட்டுள்ளதாகவும். இந்த முயற்சி வெற்றி அடைந்தவுடன் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியோடு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தரமாக இங்கு தொலைநோக்கி அமைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சோதனையை முயற்சியினை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கண்டு களித்ததோடு, நாங்கள் தொலைக்காட்சியில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட சேனலில் இதுபோன்ற சூரிய குடும்ப கோள்களையும் வானில் உள்ள நிலவு உள்ளிட்ட அரிய வகைகளை கோள்களை பார்த்து மகிழுந்ததாகவும் தற்பொழுது இந்த சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கியின் உதவியுடன் ஏழு கோள்களை நேரடியாக பார்த்தது பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் திருமதி. பொன்னேஸ்வரி இமயவர்மன் மகிழ்ச்சி தெரிவித்தார். 
இந்த நிகழ்ச்சியில் சேலம் அம்மாபேட்டை மண்டல அதிகாரிகள் தொலைநோக்கி நிபுணர்கள் சுற்றுலா பயணிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: