S.K. சுரேஷ்பாபு.
புதிய அறக்கட்டளையை துவக்கிய திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். ஏழை எளியவர்களுக்கு தொடர்ச்சியாக காலை சிற்றுண்டி விநியோகித்து மகிழ்ச்சி...
சேலம் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் தெய்வலிங்கம். இவர் 9-வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும், இலவச அமரர் ஊர்தி சேவை உள்ளிட்ட ஏராளமான நற்பணிகளை செய்து வருகின்றார். பன்முகம் கொண்ட இவரது பொதுநல சேவைக்கு முத்தாய்ப்பாக அறக்கட்டளை ஒன்றையும் துவக்கி உள்ளார். தெய்வா என்ற பெயரில் புதிய அறக்கட்டளை துவக்கி உள்ள மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கம், 3-ம் நாள் நிகழ்வாக, பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் அருகே ஏழை எளியவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருஞானம் அவர்களின் பங்களிப்பின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளையின் நிறுவனரும் வழக்கறிஞரும் மற்றும் மாமன்ற உறுப்பினருமான தெய்வலிங்கம் தெரிவித்தார். இந்த காலை சிற்றுண்டி என்னை நீண்ட வரிசையில் காத்திருந்த ஏழை எளிய பொதுமக்கள் பெற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர். இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் தெய்வலிங்கம் உட்பட குடும்பத்தார் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: