சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆந்திர மாநிலம் பெனுகொண்டா ஸ்ரீ வாசவி ஜன்ம பூமி யாத்திரை ரயில் சேலத்தில் இருந்து புறப்பட்டது. 1000 கணக்கானோர் பயணித்த இந்த சிறப்பு ரயிலை ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் Dr. நாகா. அரவிந்தன் துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தில் தெலுங்கு பேசும் மக்களான ஆரிய வைசிய சமுதாயத்தினரின் குலதெய்வமான அன்னை வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பிறப்பிடமாக கருதப்படும், ஆந்திர மாநிலம் பெனுகொண்டா பகுதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தங்களது குலதெய்வத்தை நேரில் சென்று தரிசித்து வரும் வகையில் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை சார்பில், அதற்கான சிறப்பு ரயில் இயக்க இந்திய ரயில்வே நிர்வாகத்திலும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலம் பெனுகுண்டா பகுதிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் Dr. நாகா அரவிந்தன் தலைமை வகுத்து துவக்கி வைத்தார்.
அப்போது நாளை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அங்கு நடைபெறும் விழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஆந்திர மாநில முதலமைச்சர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் தெலுங்கு பேசும் மக்களான ஆரிய வைசிய மக்கள் சிரமமின்றி சென்று தங்களது குல தெய்வத்தை வணங்கி வர வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை தெலுங்கு பேசும் மக்கள் பயன்படுத்திக்கொண்டு குலதெய்வத்தை தரிசித்து வர வேண்டும் என்றும், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பிறந்த தினமாக கருதப்படும் அந்த நாட்களில் ஆந்திர மாநிலத்திற்கு விடுமுறை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் இதற்காக ஆந்திர மாநில முதல்வருக்கு தங்களது அமைப்பின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் நிறுவன தலைவர் Dr. நாகா. அரவிந்தன் தெரிவித்தார்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: