புதன், 12 பிப்ரவரி, 2025

பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்


இரண்டு நாட்களாக நடந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், குப்பம் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று (பிப்.12) மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நான் கோவை மாவட்டம் போரூரில் உள்ள பட்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று இருந்தேன். வேறு எங்கும் செல்லவில்லை. நான் எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் ஈடுபடவில்லை.

யாரையும் ஆலோசனைக்கு அழைக்கவில்லை. எனது வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் என்னை வந்து சந்தித்து பேசுவது வழக்கம் தான். நாளை அந்தியூரில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக அந்தியூரை சேர்ந்த நிர்வாகிகள் எனது வீட்டுக்கு திரண்டு வந்துள்ளனர். மற்றபடி வேறு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார். கோவிலுக்கு சென்றதற்கு ஆதாரமாக பிரசாத தட்டை நிருபர்களிடம் காண்பித்து, எல்லோருக்கும் பிரசாதை எடுத்து கொள்ளுங்கள் என்றார்.

பின்னர் அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனை சந்தித்து பேசி விட்டு அவர் வீட்டில் இருந்து கிளம்பி சென்றனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பரபரப்பு விவாதத்திற்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: