சனி, 8 பிப்ரவரி, 2025

சேலத்தில் மாநில அளவில் சிறுவர், சிறுமியர்களுக்கான கேரம் போர்டிகள். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் மாநில அளவில் சிறுவர், சிறுமியர்களுக்கான கேரம் போர்டிகள். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 450 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. 

தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட கேரம் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும்,12,14-வயது உட்பட்டவர்களுக்கான 64-வது மாநில அளவிலான கேடட் மற்றும் சப் ஜூனியர் கேரம் சப் ஜூனியர் போட்டிகள் சேலத்தில் தொடங்கியது. 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி நேற்று தொடங்கியது. அகில இந்திய கேரம் சம்மேளனத்தின் துணைத் தலைவர் நாசர்கான் என்கின்ற அம்மான் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியினை, சேலம் மாவட்ட துணை ஆட்சியர் தொடங்கி வைத்தார். 
நேற்று துவங்கிய இந்த போட்டியில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்து 450-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆன வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த மாநில அளவிலான கேரம் போட்டியினை பார்வையிட்டு,  பங்கேற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு தங்களது  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.  
மேலும் வாரணாசியில் நடைபெற்று முடிந்த தேசிய அளவிலான கேரம் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்று நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். 
சேலத்தில் துவங்கியுள்ள மூன்று நாட்கள் கொண்ட மாநில அளவிலான  போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு நாளை கால் இறுதி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.இதில் வெற்றி பெறும் சிறுவர் சிறுமிகள் விரைவில் வாரணாசியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்று அகில இந்திய கேரம் சம்மேலனத்தில் துணைத் தலைவர் நாசர் கான் என்கின்ற அம்மான் நம்மிடையே தெரிவித்தார். 
இந்த மாநில அளவிலான கேரம் போர்டி நிகழ்ச்சிகளில் சேலம் மாவட்ட கேரம் சங்க செயலாளர் அன்பன் டேனியல், துணைத் தலைவர் லாரன்ஸ் மைய மண்டல செயலாளர் தியாகராஜன் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆய்வாளர் ராபர்ட் கிறிஸ்டோபர், சேலம் சக்தி கைலாஷ் மற்றும் ஏ வி எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் கைலாசம், தமிழ்நாடு கேரம் சென்ற பொதுச் செயலாளர் அர்ஜுனா விருது பெற்ற மரிய இதயம் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: