சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் பதஞ்சலி யோக் சமிதி சார்பில் இலவச யோகா பயிற்சி. ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு.
சேலம் மாவட்ட பதஞ்சலி யோகா சமாதி சார்பில் சிறப்பு இரண்டு நாள் யோகா பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் மறவன் ஏரியில் உள்ள மாதவம் மண்டபத்தில் இந்த சிறப்பு பயிற்சி முகாமில், ஹரித்துவார் பதஞ்சலி யோகா மரத்தின் முதன்மை மதிய ஒருங்கிணைப்பாளர் சுவாமி பரமார்த்தேவ் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,
சர்க்கரை முதுகு தண்டுவடம் சிறுநீரகம் புற்றுநோய் இதயம் முழங்கால் உள்ளிட்ட உடலில் உள்ள ஏராளமான நோய்கள் குணமாக தியான பயிற்சி வழங்கினார். நேற்று தொடங்கிய இந்த சிறப்பு இலவச தியான பயிற்சி காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு யோகா பயிற்சி முகாமில் சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சுவாமி பரமார்த் தேவ் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், உடலில் உள்ள நோய்கள் குணமாக அவர் மேற்கொண்ட யோகாவினை பார்த்து பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் யோகா தியானத்தை மற்றும் பயிற்சியினை மேற்கொண்டனர்.
இது போன்று நடைபெறும் சிறப்பு பயிற்சி முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டு நோயற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று சுவாமி பரமார்த்த தேவ் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பதஞ்சலி யோகா பயிற்சி மையத்தின் மாநில தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் மிட்டல்தாஸ், ஜெய்சந்த் லோடா ராமகிருஷ்ணன் கேசவன் உள்ளிட்டர் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: