சனி, 8 பிப்ரவரி, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 46 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 46 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரம் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

ஈரோடு கிழக்குத் இடைத்தேர்தலில் 46 தொகுதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றார். இதில், திமுக வேட்பாளரை தவிர எஞ்சிய 45 வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, தேர்தல் பொதுப்பார்வையாளர் அஜய் குமார் ஆகியோர் முன்னிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை சந்திரகுமாரிடம் ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான எச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 46 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் பின்வருமாறு:- 

1.வி.சி.சந்திரகுமார் (திமுக) - 1,15,709,

2.மா.சி.சீதாலட்சுமி (நாதக) - 24,151,

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்:- 

3.முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி) -890,

4.ஆனந்த சுப்ரமணி (மறுமலர்ச்சி ஜனதா கட்சி) - 148,

5.எம்.கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) - 392,

6.ப.சவிக்தா (சாமானிய மக்கள் நலக்கட்சி) - 286,

7.பொ.செல்லபாண்டியன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) -156,

8.வெ.சௌந்தர்யா (சமாஜ்வாடி கட்சி) - 383,

9.எஸ்.தர்மலிங்கம் (இந்திய கண சங்கம் கட்சி) - 122,

10.த.பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) - 78,

11.சு.மதுரைவிநாயகம் (விரோ கி விர் இந்தியன் கட்சி) - 293,

12.எஸ்.முத்தையா (தாக்கம் கட்சி) - 78,

13.கு.முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி) - 85,

சுயேச்சைகள்:- 

14.அக்னி ஆழ்வார் - 222,

15.அமுதரசு - 149,

16வே.செ.ஆனந்த் - 415,

17.பா.இசக்கிமுத்து நாடார் - 238,

18.சி.ரவி - 136,

19.ந.ராமசாமி -26,

20.க.கலையரசன் - 963,

21.ம.வி.கார்த்தி - 64,

22.சா.கிருஷ்ணமூர்த்தி - 92,

23.ஜெ.கோபாலகிருஷ்ணன் - 100,

24.கு.அ.சங்கர்குமார் - 68,

25.ரா.சத்யா - 124,

26.மா.சாமிநாதன் - 92,

27.ரா.சுப்பிரமணியன் -37,

28.மூ.ரா.செங்குட்டுவன் - 55,

29.டி.எஸ்.செல்லகுமார் - 270,

30.நா.தனஞ்ஜெயன் - 347,

31.ரா.திருமலை - 42,

32.ஏ.நுார்முகம்மது - 112,

33.ம.பஞ்சாசரம் - 437,

34.கே.பத்மராஜன் - 149,

35.கா.பரமசிவம் - 207,

36.செ.பரமேஸ்வரன் - 64,

37.வி.பவுல்ராஜ் - 150,

38.என்.பாண்டியன் - 129,

39.சு.மதுமதி - 213,

40.எச்.முகமமது கைபீர் - 533,

41.கு.முருகன் - 24,

42.ரா.ராஜசேகரன் -30,

43.சி.ராஜமணிக்கம் 61,

44.ரா.லோகநாதன் - 189,

45.லோகேஷ் சேகர் - 50,

46.சே.வெண்ணிலா - 222,

47.நோட்டா - 6,109,

மொத்த வாக்காளர்கள்- 2,27,546,

பதிவான வாக்குகள்-1,54,657.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: